பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியல்
நத்தத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கத்தினர் திடீர் சாலை மறியல்;
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சிபிஐஎம், மாதர் சங்கம் மற்றும் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.