புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கட்டுனாவயலை சேர்ந்தவர் மணிகண்டன் (19), இவர் தஞ்சாவூர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த அவர் நேற்று திடீரென்று கட்டுனாவயல் காட்டுப்பகுதியில் உள்ள ஓதியமரத்தில் கயிறின் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.