ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம்.

ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம்.;

Update: 2025-07-10 10:58 GMT
ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள்- ரயில் சேவையில் மாற்றம். ஈரோடு அருகே பெருந்துறை ரயில்வே யார்டில் ரயில் பாதைகளில்பராமரிப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடைபெறுவதால்ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கரூர் வழியாக இயக்கப்படும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் எண்.16843, திருச்சிராப்பள்ளி சந்திப்பில் – பிற்பகல் 13.00 மணிக்கு புறப்படும் ரயில் ஜூலை 13, 14, 18 மற்றும் 20, 2025 ஆகிய தேதிகளில் ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தம் செய்யப்படும். பெருந்துறை ரயில்வே யார்டில் பணிகள் முடிந்த பிறகு, ரயில் ஈரோடு சந்திப்பு – பாலக்காடு நகரத்திற்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி சந்திப்பு – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸின் அதே நிறுத்தங்களுடன் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

Similar News