கரூர்- பரணி வித்யாலயா பள்ளியில் தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப் போட்டி நாளை துவக்கம்.
கரூர்- பரணி வித்யாலயா பள்ளியில் தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப் போட்டி நாளை துவக்கம்.;
கரூர்- பரணி வித்யாலயா பள்ளியில் தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப் போட்டி நாளை துவக்கம். இந்திய அரசின் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப் போட்டி நாளை 11.07.2025 முதல் 13.07.2025 வரை கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைக்க உள்ளார். பத்மாவதி மோகனரெங்கன், சுபாஷினி அசோக் சங்கர் மற்றும் வனிதா அருண் விஜயன் முன்னிலை வகிக்க உள்ளனர். கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வமணி,நடுநிலைப்பள்ளிகள் கரூர் மாவட்டக் கல்வி அலுவலர்- முருகேசன், உயர்நிலைப்பள்ளிகள் கரூர் மாவட்டக் கல்வி அலுவலர்- ரவிச்சந்தர், சி.பி.எஸ்.இ பள்ளி மேலாண்மை சங்க செயலர் அசோக் சங்கர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் குணசேகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளனர்.