கடையநல்லூரில் மூதாட்டி நகை திருட்டு: போலீஸ் தேர்வு விசாரணை
மூதாட்டி நகை திருட்டு: போலீஸ் தேர்வு விசாரணை;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகை கடையில் கவரிங் செயினை வைத்துவிட்டு 4 சவரன் தங்க செயினை மூதாட்டி ஒருவர் லாவகமாக திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது குறித்து அப்துல் காதர் என்பவரின் நகை கடைக்கு வந்த 70 வயது மூதாட்டி ஒருவர் நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினுக்கு பதிலாக இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கவரிங் நகையை கண் இமைக்கும் நேரத்தில் மாற்றி வைத்து திருடி சென்றுள்ளார். இது குறித்து நகைக்கடை உரிமையாளர் புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் மூதாட்டியை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.