திருவேங்கடம் பகுதிகளில் வெள்ளைச் சோளம் நல்ல விளைச்சல்

வெள்ளைச் சோளம் நல்ல விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி;

Update: 2025-07-11 01:09 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்கரன்கோவில், திருவேங்கடம், கரிசல்குளம், கலிங்கப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிணற்று நீர் பாசன வசதி மூலம் பாரம்பரியமிக்க நாட்டுச்சோளம் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து தற்போது அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வியாபாரிகள் சோளம் குவிண்டால் ஒன்றுக்கு 3300 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாகவும் ஆனால் அவர்கள் 6000 ரூபாய் முதல் 7000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர் என குற்றம் சாட்டும் சோளம் பயிரிடப்பட்ட விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 7000 நிர்ணயம் செய்ய வேண்டி அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசிடம் தெரிவிக்கும் பட்சத்தில் எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கும் அவர்கள் ஹார்லிக்ஸ் பிஸ்கட் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கு நாட்டுச்சோளம் பயன்படுத்தி வருவதாகவும் மேலும் இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்த போதிலும் விலை மிக குறைவாக உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News