பேருந்தில் பயணித்தபோது மாரடைப்பு: வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழப்பு
பேருந்தில் பயணித்தபோது மாரடைப்பு: வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழப்பு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவா் கந்தசாமி (56). தென்காசியில் இருந்து அரசுப் பேருந்தில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தாராம். புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடா்ந்து அவரை அருகே இருந்த தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து புளியங்குடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.