குண்ணத்தூரிலிருந்து களம்பூருக்கு குடிநீர் கொண்டு செல்ல குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு காரணமாக ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம்.

ஆரணி அடுத்த குண்ணத்தூரிலிருந்து களம்பூருக்கு குடிநீர் கொண்டு செல்ல குடிநீர் திட்டத்திறகு எதிர்ப்பு காரணமாக ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமரச கூட்டம்.;

Update: 2025-07-11 04:51 GMT
ஆரணி அடுத்த குண்ணத்தூர் அருகிலிருந்து களம்பூர் பொதுமக்களின் கூடுதலாக குடிநீர் வழங்குவதற்கு ரூ.17 கோடி மதிப்பிலான குடிநீர் நீரேற்றும் கிணறு அமைக்கும் பணிக்கு குண்ணத்தூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை சமரச கூட்டம் நடைபெற்றது. ஆரணி அடுத்த குண்ணத்தூர் கிராமத்தில் கமண்டல நாக நதி ஆற்றங்கரையிலிருந்து களம்பூர் பேரூராட்சிக்கு பல ஆண்டுகளாக ராட்சச மின் மோட்டார் மூலமாக ஆற்றில் இருந்து நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. தற்போது குண்ணத்தூர் கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் நிலத்தடி நீர் மிகவும் குறைவாக உள்ளது. இந்த நிலையில் ரூ.17 கோடி மதிப்பில் அம்ருத் திட்டத்தின்கீழ் குடிநீர் நீரேற்றும் கிணறு அமைத்து கூடுதலாக குடிநீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணி நடைபெறும் இடத்தில் குண்ணத்தூர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து பணி நடைபெறும் இடத்தில் சூழ்ந்துகொண்டு இங்கு விவசாயத்திற்கு தண்ணீர் பஞ்சம் உள்ளது போராட்டம் செய்தனர். மேலும் அப்பகுதி மக்கள் 300 மீட்டர் தூரத்திற்கு தள்ளி இத்திட்டத்தினை செயல்படுத்துங்கள் என்றும் தெரிவித்தனர். இதற்கு களம்பூர் பொறியாளர் அருண் என்பவர் ஒப்புக்கொள்ளாததால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து இப்பணியினை பிறகு மேற்கொள்ளலாம் என முடிவு செய்து தற்காலிகமாக இப்பணியினை நிறுத்தினர். இதன் காரணமாக இத்திட்டம் செல்படுத்துவது குறித்து குண்ணத்தூர், களம்பூர் முக்கிய பிரமுகர்களை அழைத்து ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சிவா தலைமையில் சமரச கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குண்ணத்தூர் சார்பில் திமுக ஒன்றியசெயலாளர் துரைமாமது, அதிமுக பேரவை ஒன்றிய செயலாளர் செந்தில், ஏரிப்பாசன தலைவர் முருகன், மதிவாணன், வாசுதேவன் ஆகியோரும், களம்பூர் சார்பில் திமுக நகர செயலாளர் வெங்கடேசன், நகரதுணைசெயலாளர் ஞானமணி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அகமதுபாஷா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவலிங்கம், ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் இருதரப்பினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து முடிவாக தற்போது செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை சுமார் 300 அடி தூரத்திற்கு தள்ளி சென்று நீரோட்டம் பார்த்து செயல்படுத்துவது என முடிவு செய்தனர்.

Similar News