திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 45வது வார்டுக்கு உட்பட்ட வாவர் பள்ளிவாசல் அருகில் மழைநீர் வடிகாலில் தூர்வாராமல் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்படுகின்றது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கும் நிலை உருவாகும், இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.