ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 28,000 கன அடியாக நீர்வரத்து சரிவு;

Update: 2025-07-11 07:20 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக கர்நாடக மாநிலங்களில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் திறக்கபட்டுள்ள உபரி நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர் வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி 43,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 28,000 கனஅடியாக நீர் வரத்த சரிந்துள்ளது. தொடர்ந்து பொதுமக்கள்,சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 16ஆவது நாளாக விதிக்கபட்ட தடை நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது

Similar News