கரூர் -ஜூடோ விளையாட்டுப் போட்டி- அணிவகுப்பு நடத்திய மாணாக்கர்கள்.

கரூர் -ஜூடோ விளையாட்டுப் போட்டி- அணிவகுப்பு நடத்திய மாணாக்கர்கள்.;

Update: 2025-07-11 07:33 GMT
கரூர் -ஜூடோ விளையாட்டுப் போட்டி- அணிவகுப்பு நடத்திய மாணாக்கர்கள். இந்திய அரசின் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப் போட்டி இன்று துவங்கி நாளை மறுநாள் வரை கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் மாணாக்கர்கள் இன்று பள்ளி வளாகத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தினர். பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமையிலான நிர்வாகிகள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் விளையாட்டு போட்டியின் விதிமுறைகளை கடைபிடிப்போம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Similar News