கோவில்பட்டி கல்லூரியில் தடகள விளையாட்டு போட்டிகள்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது.;

Update: 2025-07-11 08:59 GMT
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது. கல்லூரியில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு ஓட்டடப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டுஎறிதல்,உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் கண்ணன், ரோட்ராக்ட் சேர்மன் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வித் துறை பேராசிரியர் ரமேஷ் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் கலந்துகொண்டு தடகள போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, பழனி குமார், பூல்பாண்டி, கிருஷ்ணசாமி, ராஜேந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.உடற் கல்வித் துறை தலைவர் செல்லத்துரை நன்றி கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்விதுறை பேராசிரியர்கள் சிவா, வெங்கடேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Similar News