கரூர்-புதிய நீச்சல் குளம்- காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டு விழா.
கரூர்-புதிய நீச்சல் குளம்- காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டு விழா.;
கரூர்-புதிய நீச்சல் குளம்- காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டு விழா. கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய நீச்சல் குளம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் எம்எல்ஏ-க்கள் மாணிக்கம் , சிவகாமசுந்தரி , மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் , துணை மேயர் தாரணி சரவணன்,விளையாட்டுத்துறை மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்,மாவட்ட அலுவலர் குணசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி அதற்கான பணிகளை துவக்கி வைத்தனர்.