கரூரில் தென் மண்டல சி.பி.எஸ்.இ ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.

கரூரில் தென் மண்டல சி.பி.எஸ்.இ ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.;

Update: 2025-07-11 12:40 GMT
கரூரில் தென் மண்டல சி.பி.எஸ்.இ ஜூடோ விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. இந்திய அரசின் மத்திய பள்ளிகள் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) சார்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் ஆகிய தென் மண்டல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 138 பள்ளிகளில் இருந்து சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப் போட்டி இன்று தொடங்கி ஜூலை 13 வரை மூன்று நாட்கள் கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் 'நாக் அவுட் மற்றும் டபுள் ரெபிசார்ஜ்' முறையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் ஆண் பெண் இரு பாலரும் சேர்த்து மொத்தம் 63 எடை பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வெல்லும் வீரர்கள் செப்டம்பர் மாதம் இராஜஸ்தானில் நடைபெற உள்ள தேசிய சி.பி.எஸ்.இ ஜூடோ போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மேலும் ஒவ்வொரு பள்ளியும் வெல்லும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களின் வெற்றிப் புள்ளிகள் அடிப்படையில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பைகள் வெற்றி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற மாணாக்கர்கள் வெற்றி பெறும் முனைப்புடன் தங்களது திறன்களை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர் .

Similar News