ஆற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர் அருகே ஆற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2025-07-11 12:48 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பெரியகண்மாயிலிருந்து காளியம்மன் கோயில் பின்புறம் புதுத்தெரு, மதுரைச் சாலை, சிவகங்கை சாலை வழியாக தென்மாபட்டு கண்மாய்க்கு தாம்போதி ஆற்றிலிருந்து தண்ணீா் செல்கிறது. இந்த ஆறு தற்போது கழிவுநீா்க் கால்வாயாக மாறி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆற்றில் ஆங்காங்கே கழிவுநீா் தேக்கமாக காட்சியளிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆறு தூா்வாரப்பட்டது. பின்னா் இதுவரை இந்த ஆறு கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. இந்த ஆற்றில் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் கொசுக்களும் பெருகிவிட்டதால், புதுத்தெரு மாதவன்நகா், பா்மா குடியிருப்பு, காளியம்மன் கோயில் சந்நிதி தெரு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, இந்த ஆற்றை சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Similar News