நடுநெல்லியா கவுண்டனூரில் டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.

நடுநெல்லியா கவுண்டனூரில் டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.;

Update: 2025-07-11 13:46 GMT
நடுநெல்லியா கவுண்டனூரில் டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் , முத்துரங்கப்பட்டி , சுக்காம்களம் பகுதியைச் சேர்ந்தவர் பொம்மன் வயது 45 . இதே போல கரூர் ஜெகதாபி பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் வயது 22. இவர்கள் இருவரும் ஜூலை 9ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் கரூர் - மணப்பாறை சாலையில் அவரது டூவீலரில் சென்றனர்.பொம்மன் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் நடு நெல்லியா கவுண்டனூர் அருகே சென்ற போது டூவீலரை வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த பொம்மன் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த பொம்மன் மகன் ரமேஷ்குமார் வயது 19 அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய கோபாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News