சுண்டமேடு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.

சுண்டமேடு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.;

Update: 2025-07-11 14:24 GMT
சுண்டமேடு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம். கடலூர் மாவட்டம், புவனகிரி , பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி வயது 41. இதேபோல ஈரோடு ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் வயது 63. இருவரும் நேற்று முன்தினம் இரவு 8:20 மணி அளவில் கரூர் மாவட்டம் தென்னிலையில் இருந்து சின்ன தாராபுரம் செல்லும் சாலையில் டூ வீலரில் சென்றனர்.தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் சுண்டமேடு அருகே சென்றபோது , எதிர் திசையில் சக்திவேல் என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் வீரமணி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வீரமணி மற்றும் தங்கராஜ் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக வீரமணி அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.

Similar News