கிராமப்புற வளர்ச்சி நிதியில் ஒரு கோடியே இருபத்தி எட்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த வருவாய் துறை அமைச்சர்
கிராமப்புற வளர்ச்சி நிதியில் ஒரு கோடியே இருபத்தி எட்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த வருவாய் துறை அமைச்சர்;
கிராமப்புற வளர்ச்சி நிதியில் ஒரு கோடியே இருபத்தி எட்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த வருவாய் துறை அமைச்சர் .... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள என் சுப்பையாபுரம் கிராமத்தில் கிராமப்புற வளர்ச்சி நிலையில் ஒரு கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஆறு புதிய வகுப்பறைகள் அடங்கிய கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவிகளை அழைத்து மரக்கன்றுகள் நாட்டி காய்கறி தோட்டங்கள் அமைக்க விதைகள் தூவி மாணவ மாணவியர்களிடையே விவசாயத்தை ஊக்கப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் இடையே தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உரையாடினார். மாணவர்களின் வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் காலை உணவு திட்டம் முதல் இலவச பேருந்து மற்றும் கல்வி உதவித்தொகை பெண் கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவது குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் சாத்தூர் வட்டாட்சியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் திமுக கழக நிர்வாகிகள் பள்ளி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.