ஸ்டாலின் திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு!
ஸ்டாலின் திட்ட முகாம்களில் விண்ணப்ப விவரங்களைப் பதிவேற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில், ஸ்டாலின் திட்ட முகாம்களில் விண்ணப்ப விவரங்களைப் பதிவேற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று (ஜூலை 11) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.