தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஆலடி அருணா கல்லூரி மற்றும் மேக்னஸ் செஸ் அகாதெமி இணைந்து நடத்தும் 5வது மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. பள்ளிகளுக்கு இடையிலான நடைபெறும் இந்தப் போட்டியில் 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்கலாம். போட்டியில் முதல் 15 இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவியா்களுக்கு பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் 18 வயதுக்கானோா் பிரிவில் வெற்றி பெறும் முதல் மாணவ, மாணவியருக்கு சதுரங்க கடிகாரமும் 2 முதல் 5 பரிசு வரை பெறுபவா்களுக்கு வெள்ளி நாணயங்களும் வழங்கப்படும். 9 வயதுக்கானோா் பிரிவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ங்ஹள்ஹ்ல்ஹஹ்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீா்ம். ஜ்ஜ்ஜ்.ஸ்ரீட்ங்ள்ள்ச்ங்ங்.ஸ்ரீா்ம் மற்றும் ஜ்ஜ்ஜ்.ள்ண்ஞ்ய்ண்ய்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையத்திலும் 9965373001, 9500912898 ஆகிய எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.