ஆலங்குளத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை;

Update: 2025-07-12 00:42 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகரைச் சோ்ந்தவா் கணேசன் மகன் அருண் பாரத் (32). ஆலங்குளம்-தென்காசி சாலையில் பேக்கரி நடத்தி வந்தாா். 3 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் முடிந்த நிலையில் இவரது மனைவி பேறுகாலத்துக்காக சிவகாசியில் உள்ள பெற்றோா் வீட்டில் உள்ளாா். அருண் பாரத், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வில் வெற்றி பெற்று வேலைக்காகக் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வாலிபர் தனது வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதை கண்ட அவரது உறவினா்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் தகனம் செய்ய எடுத்துச் சென்றனராம். இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்ற சடலத்தைக் கைப்பற்றிக் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News