காமதேனு நகரில்மயங்கி விழுந்த வாலிபர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழப்பு

காமதேனு நகரில்மயங்கி விழுந்த வாலிபர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழப்பு;

Update: 2025-07-12 02:57 GMT
காமதேனு நகரில்மயங்கி விழுந்த வாலிபர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காமதேனு நகர் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி வயது 44 இவர் கரூர் மாநகர பகுதியில் செயல்படும் ஒரு தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜூலை 10ஆம் தேதி காலை 7:30 மணி அளவில் அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு உமாவதி பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து உமாபதி மனைவி நந்தினி அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Similar News