இந்திய மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தனியார் நிறுவனம் கல்குவாரி மற்றும் கிரசர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் -நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு...
இந்திய மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தனியார் நிறுவனம் கல்குவாரி மற்றும் கிரசர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் -நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு....*;
விருதுநகரில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தனியார் நிறுவனம் கல்குவாரி மற்றும் கிரசர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் -நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு.... விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆ.லட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள்வசித்து வருகின்றனர் இந்த பகுதியை சுற்றி சுமார் 400 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், இந்த நிலையில் ஸ்ரீவில்லிபத்தூர் நகராட்சி புதூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் லட்சுமிபுரம் கிராமத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு இருப்பதாகவும் அதற்கு மாவட்ட நிர்வாகவும் இசைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே இந்த கிராமத்தில் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கினால் கிராமமும், கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும், எனவே மாவட்ட நிர்வாகம் ஆ. லட்சுமிபுரம் கிராமத்தில் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி தரக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு எடுத்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன முடிக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பேட்டி: குருசாமி - பகுதிவாசி