கொளந்தா கவுண்டனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்.
கொளந்தா கவுண்டனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்.;
கொளந்தா கவுண்டனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் வயது 65. இவர் ஜூலை 11ஆம் தேதி காலை 8:30 மணி அளவில் கொளந்தா கவுண்டனூர்- பசுபதிபாளையம் சாலையில் உள்ள ஒரு காபி கடை முன்பு நடந்து சென்ற போது , அடையாளம் தெரியாத ஆம்னி வேன் ஒன்று பொன்னம்பலம் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த பொன்னம்பலத்தை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த பொன்னம்பலத்தின் மகன் நரேஷ் வயது 24 என்பவர் அளித்த புகாரில் தாந்தோணி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்