புது குளத்து பாளையத்தில் மரம் வெட்டும் போது தவறி குளத்தில் விழுந்து உயிரிழப்பு.

புது குளத்து பாளையத்தில் மரம் வெட்டும் போது தவறி குளத்தில் விழுந்து உயிரிழப்பு.;

Update: 2025-07-12 11:07 GMT
புது குளத்து பாளையத்தில் மரம் வெட்டும் போது தவறி குளத்தில் விழுந்து உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா , தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மீரா ஜாபர் வயது 77. இவர் ஜூலை 17ஆம் தேதி மதியம் ஒரு மணியிலிருந்து 3 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் புது குளத்துப்பாளையம் எனும் இடத்தில் கதிர்வேல் என்பவரது தோட்டத்தில் மரம் வெட்டும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மீரா ஜாபர் அருகில் உள்ள குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த மீரா ஜாபரின் சகோதரர் அக்பர் வயது 66 என்பவர் அளித்த புகாரில் , சம்பவ இடத்திற்கு சென்று உடலை வேலாயுதம்அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Similar News