ஏ.சி.எஸ் பிசியோதெரபி மருத்துவமனை திறப்பு விழா.
ஆரணியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஏ.சி.எஸ் பிசியோதெரபி புற நோயாளிகள் பிரிவு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.;
ஆரணியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஏ.சி.எஸ் பிசியோதெரபி புற நோயாளிகள் பிரிவு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிர்வாகி ஏ.சி.எஸ்.லலிதாலட்சுமி குத்துவிளக்கு ஏற்றினார். பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக டீன் பி.ஸ்டாலின் அனைவரையும் வரவேற்றார். மேலும் ஆரணி பேருந்து நிலையத்திலிருந்து ஏ.சி.எஸ் பிசியோதெரபி புறநோயாளிகள் கிளினிக்கிற்கு வருகை தர பொது மக்களுக்கு ஏதுவாக ஏ.சி.எஸ் குழுமம் சார்பில் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பல்வேறு லேசர் பிசியோதெரபி, செயல்முறை பிஸியோதெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை தொடர்ந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது என்பதனை பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். இதில் பென்ஸ் பார்க் ஹெல்த் கேர் இயக்குநர் நிர்மலாஅருண்குமார், ஏ.சி.எஸ்.குழும செயலாளர் ஏ.சி.ரவி ஏ.சி.எஸ் கல்விக்குழும முதல்வர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.