வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகள், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மேலக் குருணைக்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துக்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். பின்னர், திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, திருச்சுழி செந்நிலைக்குடி ஊராட்சியில் ரூ.6.20 கோடி மதிப்பில் புதிய 100 சமுதாய வீடுகள், சமுதாயக் கூடம், நூலகம், குழந்தை நல மையம், விளையாட்டு மைதானம், பூங்கா, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்ட வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், திருச்சுழியில் ஒட்டுமொத்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூ.5.60 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சேகரிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, சிமெண்ட் மூட்டைகளின் இருப்பு குறித்தும் பயன்பெற்றவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஆய்வு செய்தார்.