வானூர் அருகே விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்;

Update: 2025-07-13 04:05 GMT
வானுார், வட்டார வேளாண்மை துறை சார்பில், ஒவ்வொரு கிராமங்களிலும், உழவரைத்தேடி வேளண்மை உழவர் நலத்துறை திட்டம் துவக்கப்பட்டு வருகிறது.வட்டார அலுவலர்கள் உழவர்களை வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன் ஒரு பகுதியாக தேர்குணம் கிராமத்தில், திட்ட துவக்க விழா நடந்தது. வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் வரவேற்றார்.வேளாண்மை பொறியியல் துறை விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் சுமதி, உதவி செயற்பொறியாளர் நாராயணலிங்கம் ஆகியோர், வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

Similar News