ரிதன்யா தற்கொலை வழக்கு: விசாரணைத் தொய்வால் பாதிக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு
திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா கொலை வழக்கில் விசாரணை தொய்வாக உள்ளதாக கூறி அவரின் தந்தை கோவை ஐஜியிடம் புகார் மனு.;
திருப்பூரை சேர்ந்த ரிதன்யா திருமணமாகி 78 நாட்களில், வரதட்சனை துன்புறுத்தலால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விசாரணை சரிவர நடைபெறவில்லை என்றும், வழக்கு வேறு அதிகாரி அல்லது சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்தார். அண்மையில் போலீசார் மூன்று பேரை கைது செய்தும், ஒருவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அண்ணாதுரை சந்தேகத்துடன் தெரிவித்தார். மேலும், ரிதன்யாவின் நகை மற்றும் சீர்வரிசை நீதிமன்றத்தின் வழியாக வழங்கப்படும் என போலீசார் கூறியதாகவும் தெரிவித்தார். வழக்கறிஞர் குப்புராஜ் கூறுகையில், தற்போது பதிவு செய்யப்பட்ட பிரிவுகளில் குற்றவாளிகள் எளிதில் ஜாமீன் பெறலாம் எனவே, பெண்கள் துன்புறுத்தல் தொடர்பான 75, 76, 78, 80 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அண்ணாதுரை, 27 ஆண்டுகளாக என் மகளை பத்திரமாக வளர்த்தேன், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம், ரிதன்யாவிற்கு நீதி வேண்டும் எனக் கூறினார்.