தாளமிட்டு இளையராஜா ஓவியத்தை வரைந்த கோவை கலைஞர் – வீடியோ வைரல்!
கோவையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் யு.எம்.டி ராஜா, இசை இயக்குனர் இளையராஜாவின் உருவத்தை தபேலா மீது தூரிகையால் தாளமிட்டபடியே வரைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகிறது.;
கோவையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் யு.எம்.டி ராஜா, இசை இயக்குனர் இளையராஜாவின் உருவத்தை தபேலா மீது தூரிகையால் தாளமிட்டபடியே வரைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகிறது. முன்பும் பாட்டிலுக்குள் நடிகர் விஜய், முத்தம் கொடுத்து கமல்ஹாசன் போன்ற வித்தியாசமான ஓவியங்களை வரைந்து கவனம் பெற்ற இவரது இச்செயலும் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரண ஓவியத்தை விட இசையின் தாளத்தில் தபேலா மீது ஓவியம் வரையும் அவரது புதுமையான முயற்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.