கோவையில் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் – ராஜ் பார்க் ஒட்டல்ஸ் புதிய முயற்சி

இந்தியாவின் முன்னணி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ராஜ் பார்க் ஒட்டல்ஸ் நிறுவனம், அதிநவீன வசதிகளுடன் கூடிய மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலை பிரம்மாண்டமாக துவக்கியது.;

Update: 2025-07-13 05:39 GMT
கோவை அவினாசி சாலையில், விமான நிலையத்திற்கு அருகில், இந்தியாவின் முன்னணி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ராஜ் பார்க் ஒட்டல்ஸ் நிறுவனம், அதிநவீன வசதிகளுடன் கூடிய மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலை பிரம்மாண்டமாக துவக்கியது. மொத்தம் 142 ஆடம்பர அறைகள், பிரத்யேக சூட் அறைகள், தனிப்பட்ட பர்னிச்சர் வசதிகள் உள்ளிட்டவை விருந்தினர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 400 க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் வசதி கொண்ட இந்த ஓட்டலில், 50 முதல் 1600 பேர் வரை அமரக்கூடிய 10 ஹால்கள், ஐந்து வகை உணவகங்கள், பஃபே மற்றும் ஆலக்காட் உணவுகள், உயர் தர மது கூடம், உடற்பயிற்சி மையம், நீச்சல் குளம், கருத்தரங்க கூடம் போன்ற வசதிகள் உள்ளன. ஓட்டல் துவக்க விழாவில், இயக்குநர்கள் சந்தீப் தேவராஜ், திவ்யா மற்றும் பொது மேலாளர் மது சூதனன் பங்கேற்று செய்தியாளர்களிடம் தகவல்களை பகிர்ந்தனர். கோவையின் வளர்ச்சியில் பங்கெடுக்க இது ஒரு முக்கியமான கட்டமாகும் என்றும் தெரிவித்தனர்.

Similar News