திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பத்தினால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தாலும் இன்று விடுமுறையை முன்னிட்டும் தாமிரபரணியில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்து குளித்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக அனைத்து தாமிரபரணி ஆற்றுப்பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.