நான் பெற்ற பிள்ளைக்கு இன்னொருவர் பெயர் வைப்பதா? செந்தில் பாலாஜி கேள்வி.
நான் பெற்ற பிள்ளைக்கு இன்னொருவர் பெயர் வைப்பதா? செந்தில் பாலாஜி கேள்வி.;
நான் பெற்ற பிள்ளைக்கு இன்னொருவர் பெயர் வைப்பதா? செந்தில் பாலாஜி கேள்வி. கரூரில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,அதிமுகவினர் கடந்த ஐந்தாண்டுகளில் செய்த சாதனையை மக்களிடம் சொல்ல அவர்களுக்கு தைரியம் இல்லை. கரூருக்கு அவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்களா?அப்படியும் அவர்கள் சிலதை சொல்லுவார்கள். அவை அனைத்துமே நான் கொண்டு வந்த திட்டம்.இது நான் பெற்ற பிள்ளைக்கு இன்னொருவர் பெயர் வைப்பதற்கு சமமாகும். கொரோனா காலத்தில் கெட்டுப்போன பாமாயில் மக்களுக்கு கொடுத்து சாக்கடையில் தூக்கி வீசினார்கள்.அது மட்டுமே அவர்கள் செய்த சாதனை. மேடைகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் செய்த சாதனைகளை விளக்கி சொல்லி வாக்கு சேகரிப்பது தான் ஒரு அரசியல் கட்சிக்கு நாகரீகமாகும் என தெரிவித்தார்.