திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் அரசு கிளை நூலகத்தில் "தாமிரபரணி வாசகர் வட்டம்" மற்றும் "தேசிய வாசிப்பு இயக்கம்" சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்த நாள் விழா, +2 மற்றும் SSLC பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகள் மற்றும் சாதனையாளர்களை பாராட்டும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.