சங்கரன்கோவில் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செந்தில் (எ) குமரகுருபரன்(45) இவர் மனநல பாதிக்கப்பட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.