தராசுத்தட்டில் பணமும் காக்கியும் வைத்து மனு அளித்த சமூக ஆர்வலர்.
தராசுத்தட்டில் பணமும் காக்கியும் வைத்து மனு அளித்த சமூக ஆர்வலர்.;
தராசுத்தட்டில் பணமும் காக்கியும் வைத்து மனு அளித்த சமூக ஆர்வலர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் அமிர்தானந்தம். பல்வேறு சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாகஅதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறார். இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கண்களை கட்டிக்கொண்டு தராசு தட்டில் ஒரு தட்டில் பணமும் மற்றொரு தட்டில் காக்கியும் வைத்து எடுத்து வந்தார். இது தொடர்பாக செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மாயனூர் காவல் நிலையத்தில் ஐந்து புகார்கள் அளித்தும் எனது புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக என் மீது நடவடிக்கை எடுப்பதற்கு குளித்தலை டிஎஸ்பி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் எனவும், இதனால் ஒரு சிலர் காக்கிச்சட்டை அணிந்தும் சட்டத்திற்கு புறம்பாக வேலை செய்வதை சுட்டிக்காட்டுவதற்காக ஒரு தட்டில் தராசும் ஒரு தட்டில் பணம் வைத்து இன்று மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார். மேலும் தான் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் மீது குற்றச்சாட்டு இருந்தால் அதையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.