திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட பாட்டப்பத்து, நபிகள் நாயகம் தெரு, தேவிபுரம் ஆகிய பகுதிகளில் இன்று (ஜூலை 14) தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இதில் கால்நடை மருத்துவர்கள் பங்கேற்று தடுப்பூசிகளை நாய்களுக்கு செலுத்தினர். இந்த நிகழ்வின்பொழுது 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.