பிரசவத்தின் போது உயிரிழந்த இளம் பெண் மரணம்-சந்தேகம் தெரிவித்து புகார்.
பிரசவத்தின் போது உயிரிழந்த இளம் பெண் மரணம்-சந்தேகம் தெரிவித்து புகார்.;
பிரசவத்தின் போது உயிரிழந்த இளம் பெண் மரணம்-சந்தேகம் தெரிவித்து புகார். கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி யோக பிரியா கடந்த இரண்டாம் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு அதிக உதிரப்போக்கினால் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் தெரிவித்து பாதிக்கப்பட்ட சுரேஷ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கரூர் மாநகராட்சி உறுப்பினர் தண்டபாணி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்த தண்டபாணி,உதிரப்போக்கை கட்டுப்படுத்த நவீன வசதிகள் இருந்த போதும் இளம்பெண் இறப்பிற்கு பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. தற்போது அந்த கைக்குழந்தை மருத்துவமனையில் பராமரிக்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையும், சுரேஷிற்கு அரசு வேலையும் வழங்க மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் இருந்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்