நாச்சிமுத்து நகரில் கார்கள் மோதல் இருவர் படுகாயம்.
நாச்சிமுத்து நகரில் கார்கள் மோதல் இருவர் படுகாயம்.;
நாச்சிமுத்து நகரில் கார்கள் மோதல் இருவர் படுகாயம். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 35 கார் டிரைவர். இதே போல கரூர் மாவட்டம் மன்மங்கலம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 39.கார் டிரைவர். இவரது காரில் கரூர் சிந்தலவாடியைச் சேர்ந்த ராமராஜ், மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் ஜூலை 10ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில் கரூர்- கோவை சாலையில் சென்றனர். அப்போது மணிகண்டன் காரை வேகமாக இயக்கியதால், க.பரமத்தி நாச்சிமுத்து நகர் பகுதியில் முன்னாள் சென்ற சதீஷ்குமார் காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில்,காரில் பயணித்த பிரகாஷ் மற்றும் ராமராஜ் ஆகிய இருவருக்கும் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது தொடர்பாக சதீஷ்குமார் அளித்த புகாரில் காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.