மரத்தாளிலான திருக்குறள் நூலை வெளியிட்ட சபாநாயகர்
தமிழக சபாநாயகர் அப்பாவு;
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் நேற்று (ஜூலை 14) மரத்தாளிலான திருக்குறள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு வெளியிட்டார்.இந்த மரத்தாளிலான திருக்குறளை சேரன்மகாதேவி ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி நல்லாசிரியர் பொன்ரேகா உருவாக்கியுள்ளார்.