நெல்லையில் பேனர்கள் அதிரடியாக அகற்றம்
அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் அகற்றம்;
முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜரின் பிறந்த தினம் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பு காமராஜர் சிலை முன்பு ஏராளமானோர் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அதிரடியாக அகற்றினர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.