கரூர்-பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் திறந்த காமராஜருக்கு பிறந்தநாள் விழா.
கரூர்-பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் திறந்த காமராஜருக்கு பிறந்தநாள் விழா.;
கரூர்-பட்டிதொட்டி எங்கும் பள்ளிகள் திறந்த காமராஜருக்கு பிறந்தநாள் விழா. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் தனது ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் பள்ளிகள் திறந்து தமிழக மக்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்தினார். அவரது 122 வது பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக அமைப்பினர் அரசியல் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் முழு திரு உருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜர் புகழை கூறி கோஷங்களை எழுப்பினர்.இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். .