கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி பந்தயம்
சாக்கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் வீரசேகர உமையாம்பிகை திருக்கோவிலில் ஆனி தேரோட்டம், திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஜோடிகள் பங்கேற்றன. நிர்ணயம் செய்த தூரம் வரை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளருக்கும், சாரதிக்கும் ரொக்க பரிசும் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது. இப்பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு கழித்தனர்