தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய கவுன்சிலர்

சிவகங்கையில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை கவுன்சிலர் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்;

Update: 2025-07-15 07:01 GMT
சிவகங்கை அருகே உள்ள பிள்ளைவயல் காளியம்மன் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண், குடும்ப பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளாகி சிவகங்கை நகர மையத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நீரில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அச்சமயம் அந்த வழியாக வந்த 21வது வார்டு நகர் கவுன்சிலர் ஐயூப்கான், தண்ணீரில் குதித்து, மகேஸ்வரியை மீட்டார். அவருடன் அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் உதவிசெய்து, மகேஸ்வரியை கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், மக்கள் ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து, மகேஸ்வரியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவகங்கை நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News