கரிவலம்வந்தநல்லூரில் ஸ்ரீ ஜோதி கல்வி குழுமம் சார்பாக பட்டமளிப்பு விழா
தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பெருந்தலைவர் காமராஜர் 123-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீஜோதி கல்வி குழுமம் சார்பாக கல்லூரி இயக்குனர் கனகஜோதி தலைமையில் 60க்கு மேற்பட்ட மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை இயக்குனர் செல்வகுமார், கல்லூரி முதல்வர் பிரியா, துணை முதல்வர் செல்வி உள்ளிட்ட ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.