மணல் கொள்ளை விவகாரத்தில் அதிகாரிகளுக்கு கமிஷனா? சந்தேகம் தெரிவித்த வழக்கறிஞர்.

மணல் கொள்ளை விவகாரத்தில் அதிகாரிகளுக்கு கமிஷனா? சந்தேகம் தெரிவித்த வழக்கறிஞர்.;

Update: 2025-07-15 09:39 GMT
மணல் கொள்ளை விவகாரத்தில் அதிகாரிகளுக்கு கமிஷனா? சந்தேகம் தெரிவித்த வழக்கறிஞர். நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான நன்மாறன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் அருகே வாங்கலில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பான கொலை விவகாரம் குறித்து. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த நன்மாறன்,கரூர் மாவட்டத்தில் மணல் அள்ள நீதிமன்றம் தடை விதித்தும் தடையின்றி மணல் கொள்ளை நடப்பதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் , இதில் அதிகாரிகள் கமிஷன் ஏதேனும் பெறுகிறார்களா என சந்தேகம் தெரிவித்தார். மேலும் மணல் கொள்ளையால் ஏற்பட்ட பிரச்சனையை திசை திருப்பி இட பிரச்சனையால் ஏற்பட்டது போல மாற்றுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

Similar News