திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்;

Update: 2025-07-15 13:58 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையில் மடப்புரம் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலகம், கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அஜித் குமார் தாக்கப்பட்ட மாணவர் விடுதி பின்புறம் உள்ள புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் மீண்டும் இன்று திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அதிரடியாக நுழைந்த இரு சிபிஐ அதிகாரிகள், ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த விசாரணை பின்பு சிபிஐ அதிகாரிகள் காவல் நிலையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

Similar News