தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த யானையால் பரபரப்பு

தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த யானையால் பரபரப்பு;

Update: 2025-07-16 01:47 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கிரியனப்பள்ளியில் நேற்று காலை கிராம மக்கள் வழக்கமாக தங்களது பணியில் ஈடுபட்டு இருந்தனர். பெண்களும் வாசலில் கோலம் போட்டபடியும் இருந்தனர். அப்போது திடீரென யானை ஒன்று ஊருக்குள் சாதாரணமாக நடந்து வந்தது. இதைக்கண்ட கிராம மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிலர் வீடுகளை உள்புறமாக பூட்டிக்கொண்டனர். அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது.

Similar News