சந்தைப்பேட்டையில் சாலை அமைக்கும் பணி துவக்கம்
சாலை அமைக்கும் பணி துவக்கம்;
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்தில் உள்ள நடுத்தெரு பகுதியில் சாலை பல ஆண்டுகளாக சிதலமடைந்து கழிவுநீர்கள் தேங்கிய நிலையில் காணப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய சாலை அமைக்கும் பணி இன்று (ஜூலை 16) துவங்கியது. இந்த சாலை அமைப்பதற்கான பணிகளை சீவலப்பேரி ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.