மாவடியான் கோவில் தெருவில் மூச்சு திணறலால் மூன்று நாள் குழந்தை உயிர் இழப்புப்பு.

மாவடியான் கோவில் தெருவில் மூச்சு திணறலால் மூன்று நாள் குழந்தை உயிர் இழப்புப்பு.;

Update: 2025-07-16 11:14 GMT
மாவடியான் கோவில் தெருவில் மூச்சு திணறலால் மூன்று நாள் குழந்தை உயிர் இழப்புப்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு வயது 38.இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஏற்கனவே 4- ஆண் குழந்தை , ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜூலை 12ஆம் தேதி மீண்டும் ஒரு ஆண் குழந்தை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்தது. இந்நிலையில் 14 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் பிறந்த குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இது தொடர்பாக பாபு அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News